கிறிஸ்தவர் என்ற அடையாளத்துடன் தேர்தலுக்கு வருகிறேன் என்று சொல்லும் விஜய்யை ஏற்றுக்கொள்ள முடியாது – தமிழ்நாடு கிறிஸ்தவ நல அமைப்பு அறிவிப்புதமிழ்நாடு கிறிஸ்தவ நல அமைப்பின் செயற்குழு கூட்டம் கரூர் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று அதன் தலைவர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா தலைமையில் நடைபெற்றது.

சிஎஸ்ஐ மற்றும் கத்தோலிக்க திருச்சபைகளைச் சேர்ந்த பேராயர்கள் மற்றும் சுயாதீன திருச்சபை நிர்வாகிகள், குருமார்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தியதுடன், மதச்சார்பற்ற முற்போக்கு

கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமெனவும், தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக கல்வி மற்றும் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டு வரும் சிறுபான்மை கிறிஸ்தவர்களை ஸ்டாலின் அரசு பாதுகாக்கும் அரனாக இருக்கும் என்றார். அதேநேரம், கடந்த ஐந்து ஆண்டுகளில் நல்லாட்சி செய்துவரும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவ நல அமைப்பு மற்றும் கிறிஸ்தவர்கள் முழுமையான ஆதரவு அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. 234 தொகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் களப்பணி ஆற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படித்துவிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளில் பலர் இருந்தாலும், சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு தான் ஆதரவு அளிக்க முடியும், அந்த வகையில் கிறிஸ்தவரான ஜோசப் விஜய், நேற்றுவரை தனது தொழிலில் பிஸியாக இருந்துவிட்டு இன்றைக்கு கிறிஸ்தவர் என்ற அடையாளத்துடன் தேர்தலுக்கு வருகிறேன் என்று சொன்னால் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என மாநில தலைவர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
“விஜய் கிறிஸ்தவர் அடையாள அரசியல் ஏற்க முடியாது” – கிறிஸ்தவ நல அமைப்பு அறிவிப்பு



Comments