Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி கிழக்கில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் தீவிர பிரச்சாரம்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் G. ராஜசேகரன் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். அதன்படி, அண்ணா சிலை மற்றும் பூசாரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது, பெண்கள், முதியோர், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு அவருக்கு மாலைகள் அணிவித்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர். மேலும், பொதுமக்களுடன் கலந்துரையாடிய ராஜசேகரன், பகுதி மக்களின் குறைகள் மற்றும்

தேவைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் திரளான பங்கேற்புடன் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி, அந்த பகுதிகளில் தேர்தல் சூழ்நிலையை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *