சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொறியாளர் க.ராஜசேகரன் பல்வேறு மக்கள் நல வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.அவரது தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 முதல் 10 ஆயிரம் வரை சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கட்டணமில்லா பேருந்து சேவை, 5 லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் ரூ.25,000 மானியத்துடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் உள்ளிட்டோருக்கான உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீடு 10% ஆக உயர்த்தப்படும் என்றும், இல்லத்தரசிகளின் பணிச்சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.அத்துடன், “அம்மா இல்லத் திட்டம்” மூலம் அனைவருக்கும் வீடு, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்குதல், வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசியுடன் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Facebook*
https://www.facebook.com/share/15fQCjhASKm/
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments