Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

முசிறியில் கருணை ராஜாவை அறிமுகப்படுத்தி கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் முசிறி தொகுதி தி.மு.க வேட்பாளர் கருணை ராஜா அவர்களை கழக முதன்மைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தொண்டர்களிடையே உரையாற்றிய கே.என்.நேரு கூட்டணி கட்சித் தொண்டர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றி உதயசூரியன் சின்னத்திற்கு பெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும்.மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படும் நமது வேட்பாளருக்கு வாக்களித்து, தொகுதியின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.
என்று கூறி, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார்.

மேலும் தொகுதியின் ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் கொண்டு செல்ல வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக, மக்கள் நீதி மையம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *