Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

அம்மன் ஸ்தலங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்தலமாக
சமயபுரம் மாரியம்மன் விளங்குகிறது. வேறு எந்த ஸ்தலத்திலும் காணப்பெறாத படி இத்திருத்தலத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக, சிவபதத்தில் விக்ரமசிம்மாசனத்தில் எழுந்தருளி மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்த விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாமலும், சகல செளபாக்கியங்களும் கிடைக்க , அம்மனே பக்தர்களுக்காக 28 நாள்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை இருப்பது இத்திருக்கோயிலின் தனிப் பெரும் சிறப்பாகும்.

இத்தகைய சிறப்புமிக்க பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல்,காத்தல், அழித்தல்,மறைத்தல் அருள்பாலித்தல் இந்த ஐந்து தொழில்களையும் சித்திரைப் பெருவிழா நாள்களில், இங்கு அம்மன் அருள் புரிந்து வருவது இத்திருத்தலத்தின் சிறப்பாகும்.

இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்டம் விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உற்சவ அம்பாள் கிராம்பு ஏலக்காய் மாலையுடன் கேடயத்தில் புறப்பாடகி தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

இதனையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும்.
முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா வரும் ஏப்.14 ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு நடைபெற உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *