Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், கழக முதன்மை செயலாளர்,அமைச்சர் கே.என்.நேரு மேற்கு தொகுதிக்குட்பட்ட
கோரிமேடு,புது தெரு, நாயக்கர் தெரு,
புத்தடி மாரியம்மன் கோவில் தெரு,
ஒண்டி கருப்பண்ணசாமி கோவில் பகுதி,
கள்ளர் தெரு,
சின்ன மிளகுபாறை, ராஜா காலனி, எஸ்பிஐ காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு தீவிர வாக்கு சேகரிபப்பில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்கள் வழி நெடுகிலும் திரண்டு வந்து மலர் தூவி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.பிரச்சாரத்தின் போது அமைச்சர் கே.என்.நேரு தமிழக அரசின் சாதனைகளையும், தொகுதிக்கு செய்யப்பட்டுள்ள திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி,
நமது பகுதியின் வளர்ச்சி தொடரவும், மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்கவும் வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும் வெற்றியை தேடித்தர வேண்டும் என அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே என் நேரு இன்று வெள்ளிக்கிழமை காலை மெடிக்கல் காலேஜ் ரோடு பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் திருச்சி மிளகு பாறை, ஆதி திராவிடர் தெரு, கோரிமேடு, சின்ன மிளகுபாறை, ராஜா காலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் நேருக்கு பொதுமக்கள் தொண்டர்கள் என அனைவரும் ஆராத்தி எடுத்து அமைச்சர் கே என் நேருவை வரவேற்றனர்
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*

*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *