திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைராஜ், நேற்று இரவு தனது தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது கிராம மக்கள் அனைவரும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருந்தபோதும் ஒன்றும் செய்யாத துரைராஜ் தங்களது கிராமத்திற்குள் ஓட்டுகேட்டு வரக்கூடாது என வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கட்சியினர் கிராம மக்களிடம் மற்றும் இளைஞர்களிடம் சமரசம் பேசியும் எடுபடாததால், திமுக வேட்பாளர் துரைராஜ் அங்கிருந்து காரில் புறப்பட்டு அடுத்த கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தான் பத்து ஆண்டுகளாக சேர்மனாக இருந்த கிராமத்திற்கு ஒன்றும் செய்யாத துரைராஜ் வெற்றி பெற்ற பிறகு சட்டமன்ற உறுப்பினராக என்ன செய்வார் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர், அதேநேரம் திமுக வேட்பாளர் விரட்டியடிக்கப்பட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments