திருவெறும்பூர் தொகுதி மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு முன்னணி வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் எழுச்சியுடன் ஒன்று கூடி மாபெரும் ஆதரவுப் பேரணியை நடத்தினர்.

திருச்சி பெல் (BHEL) வளாகத்தில் உள்ள தொழிலாளர் முன்னேற்றச் சங்க (தொ.மு.ச.) அலுவலகத்தில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டனர்.ஆதரவு முழக்கம் -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், தங்கள் ஆதரவை ஒருமனதாகத் தெரிவித்தனர்.

தன்னெழுச்சிப் பேரணி-அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இந்தப் பேரணி, தொகுதிக்கு உட்பட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் அணிவகுத்து நின்றது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
அமைச்சர் மீதான அன்பின் காரணமாகவும், அவரது மக்கள் நலப் பணிகளை பாராட்டியும் இந்த விழிப்புணர்வுப் பேரணியைத் தாமாக முன்வந்து (தன்னெழுச்சியாக) நடத்தியதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments