திருச்சி லால்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் பாரிவள்ளலை லால்குடி கடைவீதி பகுதியில் ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி தேர்தல் பரப்புரை செய்தார்.அப்போது பேசிய அவர்….திமுக கடந்த 5 ஆண்டுகளாக செய்து வரும் திட்டங்களை பேசி பட்டியலிட்டார்.திமுக வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் பாரி வள்ளலை வெற்றி பெற செய்வீர்கள் என தெரியும். ஆனால் கடந்த முறையை விட 50 ஆயிரம் வாக்குகள்

வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மிக முக்கியமாக திமுகவை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்பவர். அவருக்கு ஐயாயிரம் கோடிக்கு மேல் சொத்து உள்ளவர். ஆயிரம் கோடி சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. அவர் மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்தியா முழுதும் உள்ளது. அவர் குடும்பத்தினர் ஒவ்வொருவர் ஒவ்வொரு கட்சியில் உள்ளனர். இந்த முறை அவரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். லால்குடி சுயமரியாதை மண் என பரப்புரை செய்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments