அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் T. T. V. தினகரன் திருச்சி கருமண்டம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய தினகரன், திருச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் K. N. நேரு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பணத்தின் பலத்தை நம்பி தேர்தலில் களம் காண்கிறார் என்றும், அவரது பெயர் ஊழலுடன்

தொடர்புபட்டதாக மக்களிடம் பேசப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.
மேலும், “அவரது தொகுதியில் அமலாக்கத்துறை சுமார் 2300 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் தொடர்பான விவரங்களை கண்டறிந்துள்ளது” எனவும், இதுகுறித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தினகரன் குற்றம்சாட்டினார்.
தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர்,M. K. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல துறைகளில் ஊழல் நடைபெறுகிறது என்றும்,

பொதுமக்களின் வரிப்பணம் முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின்,சபரீசன் உள்ளிட்டோர் ஆட்சியுடன் தொடர்புடையவர்களை குறித்தும் விமர்சனம் மேற்கொண்டார். கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகளில் செயல்பாடு குறைபாடுகள் உள்ளதாகவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்களின் செயல்பாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் பொதுமக்களை பாதித்துள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.இறுதியாக, “தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, சட்டம்-ஒழுங்கு சீராகும் ஆட்சியை உருவாக்க வேண்டும். அதற்காக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு வழங்க வேண்டும்” என்று பொதுமக்களிடம் தினகரன் கேட்டுக்கொண்டார்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments