Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமத்துவபுர வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு-மங்கம்பட்டியில் சாலை மறியல், தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

துறையூர் அருகே மங்கம்பட்டி பகுதியில் சமத்துவபுரம் வீடுகள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி அய்யாக்கண்ணு தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்அருகில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர், துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்றவுடன் உங்களுக்கு உதவுவதாக உறுதி…திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தளுகை ஊராட்சி பகுதிகளான மங்கம்பட்டி கிராம மக்கள் மற்றும் ஊராட்சி பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சமத்துவபுரம் 100 வீடுகள் ஒதுக்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது,

அதன் பிறகு பகுதி மக்களிடம் அரசு துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்படும் எனக் கூறி நடவடிக்கை மேற்கொண்டனர், இதிலும் முறையாக ஏழைகளுக்கு வீடுகள் ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டி துறையூர் அருகே துறையூர் முதல் தம்பம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் மங்கம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இயக்க நிறுவனர் அய்யாக்கண்ணு தலைமையில் மங்கம்பட்டி கிராமத்தில் சமத்துவபுர வீடுகள் முறைகேடு நடந்ததாக கூறி தளுகை ஊராட்சி பகுதி மக்களுடன் சாலையில் அமர்ந்து தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக கூறி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது,

தகவல் அறிந்த துறையூர் வட்டாட்சியர் சிவக்குமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், தொடர்ந்து துறையூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரோஜாவும் போராட்டக்காரர்களிடம் நான் வெற்றி பெற்று வந்தவுடன் உங்களுடைய கோரிக்கையை சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு அனைவருக்கும் முறையாக வீடுகள் பெற்று தருவதாக அய்யாகண்ணியிடம் உறுதி அளித்தார், இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை

கைவிட்டனர், சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, தேர்தல் நேரங்களில் இது போன்ற நிகழ்வுகள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, சாலை மறியல் போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*

*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *