Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மணப்பாறையில் மமக வேட்பாளருக்கு ஆதரவாக திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் பிரச்சாரம்.தவெக வினரை விசில் குஞ்சுகள் என விமர்சனம் செய்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமது போட்டியிடுகின்றார். இவருக்கு ஆதரவாக திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் இன்று மணப்பாறை காமராஜர் சிலை, மஞ்சம்பட்டி, வேங்கைகுறிச்சி, ஆவாரம் பட்டி, மலையடிப்பட்டி, பன்னாங்கொம்பு, துவரங்குறிச்சி, தேனூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மஞ்சம்பட்டியில் தின்னை பிரச்சாரத்திலும் ஈடுபட்ட அவர் தி.மு.க ஆட்சியில் மகளிருக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்டவைகளை விளக்கி வாக்கு சேகரித்தார். பின்னர் பேசிய அவர்,
தொகுதி மறுவரையறை மசோவுடன் சேர்த்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் சேர்த்து தாக்கல் செய்யும் போது அது தோல்வியடைந்ததும் மகளிருக்கு எதிராக தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் செய்து விட்டதாக கூற வேண்டும் என்பதற்காகத் தான் செய்துள்ளார்கள். இந்த மசோதா தோல்வியுறும் என்று பாஜகவிற்கு தெரியும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் தோல்வியுற்றதால் மகளிர் திராவிட கட்சிகளை தவறான நினைப்பார்கள் என்பது தான் பாஜகவின் எண்ணம். இது தேர்தலை மையப்படுத்தி செய்யப்பட்டது தான். தமிழகத்தில் மகளிர் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள் என்பது பாஜகவுக்கு நன்றாகவே தெரியும். அதை குலைப்பதற்காகவே இதை

முன்னெடுத்தார்கள். தொகுதி மறுவரை மசோதா தோல்வியுற்றது. மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர வேண்டியது தானே. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை இப்போது நிறைவேற்றலாமே. ஏன் அவர்கள் கொண்டுவரவில்லை. அவர்களின் நோக்கம் அதுவல்ல. பெண்கள் குழப்ப வேண்டும் அவ்வளவு தான்.
இன்றைக்கு சகோதர சகோதரிகள் இளைஞர்கள் சிறுவர்கள் செல்போனில் அரசியல் செய்கின்றனர் அது ஒருபோதும் ஒர்க் அவுட் ஆகாது. தற்போது விசில் குஞ்சுகள் வேறு வந்துள்ளது. நடிகர்கள் வந்தால் கூட்டம் கூடும். அந்தாளு (விஜய்) ஒரு விசில் இவர்கள் ஒரு விசில். விசில் குஞ்சுகள் உங்களிடம் ஓட்டு கேட்டு வரும் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேளுங்கள். திமுகவின் திட்டங்களை பேப்பரில் எழுதி படிக்கச் சொல்லுங்கள் அவர்களுக்கு படிக்கத் தெரியாது.

இருந்தாலும் பராவாயில்லை இதெல்லாம் ஸ்டாலின் அரசு செயாதுள்ளது. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேளுங்கள். உங்கள் தலைவர் என்ன மாற்றம் கொண்டுவருவார் என்று கேளுங்கள். என்று பேசினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *