2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
அதன்படி, வரும் 21.04.2026 காலை 10.00 மணி முதல் 23.04.2026 இரவு 12.00 மணி வரை மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும். மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 04.05.2026 அன்று கூட அனைத்து மதுபான கடைகளும் செயல்படாது.

இதனுடன் இணைந்து செயல்படும் பார், ஹோட்டல்கள் மற்றும் உரிமம் பெற்ற இடங்களிலும் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், குறிப்பிட்ட நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்வதும், பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வதும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சரவணன், வெளியிட்டுள்ளார்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
தேர்தலை முன்னிட்டு திருச்சியில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்



Comments