Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மணச்சநல்லூரில் இன்று கதிரவனின் சுற்றுப்பயண விபரம்

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர்களை சந்திக்கும் வகையில் திமுக வேட்பாளர் மணச்சநல்லூர் எஸ். கதிரவன் தலைமையில் “தேர்தல் சுற்றுப்பயணம் இன்று (20.04.2026) நடைபெறுகிறது.இந்த சுற்றுப்பயணம் மாலை 4.00 மணிக்கு பூணம்பாளையம் ஊராட்சியில் தொடங்கி, இரவு 10.00 மணி வரை பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் மணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நேரடியாக மக்களை சந்தித்து ஆதரவு கோர திட்டமிடப்பட்டுள்ளது.

பேரணியின் தொடக்கமாக பாண்டாஜி நகர், சிதம்பரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் மக்கள் சந்திப்பு மேற்கொள்ளுகிறார். தொடர்ந்து ராமசாமிபாளையம் மேட்டூர், அண்ணாநகர், வக்கம்பட்டி, பட்டறைமுக்கம், ரயில்வே மில், பூணம்பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது.அதனைத் தொடர்ந்து ச. கண்ணனூர் பேரூராட்சி பகுதிகளில் சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. இதில் ராசம்பட்டி, இந்திரா காலனி, ஒட்டச்சேரி, கடவைத்தெரு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

மேலும் மாலை நேரத்திலிருந்து இரவு வரை 12-க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர் நேரடியாக வாக்காளர்களை சந்தித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார். மாரியம்மன் கோவில் திடல், பாப்பான் தெரு, நரசிம்மநகர், ஜெயசிங்கபுரம், செல்லாண்டி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *