234 தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் திருச்சியில் பிரித்து கொடுக்கும் பணி-நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 38 மாவட்டங்களில் பதிவான தபால்வாக்குகள் அனைத்தும் திருச்சி மாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்டு ஒருங்கிணைப்பு மையம் மூலமாக பிரித்து அனுப்பும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

திருச்சி கலையரங்கம் திருமண மண்டபம் அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி மேற்பார்வையில், 38 மாவட்டங்களில் இருந்து 234 தேர்தல் பார்வையாளர் மற்றும் அதிகாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட தபால் வாக்குகள் அந்தந்த சட்டமன்றதொகுதி வாரியாக பிரித்து அனுப்பும்பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது, இந்தப் பணிகள் யாவும் ஆங்காங்கே கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதுடன், 38 மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட மொத்த தபால்வாக்குகள் விபரங்கள் கணினி மூலம் பதிவேற்றம் செய்யும்

பணியும் நடைபெற்று வருகிறது, இன்று பிரித்து அனுப்பப்படும் தபால் வாக்குகள் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது அந்தந்த தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக இந்த ஒருங்கிணைப்பு மையம் மூலம் தபால் வாக்குகள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கிய நிலையில்,தற்போது முதன் முறையாக சட்டமன்ற தேர்தலிலும் திருச்சியிலேயே தமிழ்நாடு முழுவதும் பதிவான தபால் வாக்குகள் பிரிக்கும் பணி தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
234 தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் திருச்சியில் பிரித்து கொடுக்கும் பணி



Comments