Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திமுகவிற்கு சவாலான தேர்தல் இல்லை மீடியாக்கள்தான் சவால் -திருச்சி மக்கள் மன்றத்தில் வாக்களித்த பின்பு அமைச்சர் கே என் நேரு பேட்டி

திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் வாக்குச்சாவடி இரண்டிலும் வாக்காளர்கள் காலை 6:45 மணிக்கு வாக்களிக்க நீண்டு வரிசையில் வந்து நின்றனர்.

வாக்கு சாவடியில் 938 வாக்குகளும்,61 ல் 676 வாக்குகளும் உள்ளது.

வாக்குச்சாவடி 61 இல் தனது வாக்கினை பதிவு செய்ய வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு முப்பது நிமிடமாக காத்துக்கொண்டிருந்தார், வாக்காளர்களும் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தார்கள் வி வி பேட் இயந்திரம் பழுதாகி உள்ளதால் அதனை சரி செய்யும் பணியில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் மற்றொரு வாக்குசாவடி 63 வாக்குப்பதிவு எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டு சரி செய்யப்பட்டு தற்பொழுது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
மாற்று விவி பேட் எந்திரம் கொண்டுவரப்பட்டு
மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு.

தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த தேர்தல் எந்த வகையிலும் சவாலாக இல்லை. எப்பொழுதும் போல் தான் உள்ளது. ஊடகங்கள் தான் இந்த தேர்தலை சவாலான தேர்தல் என வெளியிட்டு வருகிறார்கள்.

திருச்சி கிழக்கு தொகுதியில் நிச்சயமாக உதயசூரியன் தான் வெற்றி பெறும். 9 தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய ஆதரவு திமுக கூட்டணிக்கு உள்ளது.

டெல்டா மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை நோக்கி தான் நாங்கள் தேர்தல் பணியாற்றினோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது.

எங்களுடைய இலக்கை நோக்கி தான் நாங்கள் பயணம் செய்து உள்ளோம் மக்களின் ஆதரவு முதலமைச்சருக்கு உள்ளது நிச்சயம் 200 தொகுதுகளில் வெற்றி பெறுவோம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *