திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் ப.குமார் திருச்சி செம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
தமிழகத்தில் 17ஆவது சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது .

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது .
தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்வதற்காக இன்று காலை முதலே ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் ப.குமார் செம்பட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு வருகைதந்து வாக்குசாவடி மையத்தில் வாக்களித்தார்.
தொடர்ந்து அவர் திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments