திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தின் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) அனைத்தும் குறிப்பிட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 138 – மன்னப்பாறை, 139 – ஸ்ரீரங்கம், 140 – திருச்சி (மேற்கு), 141 – திருச்சி (கிழக்கு), 142 – திருவெறும்பூர், 143 – லால்குடி, 144 – மண்ணச்சநல்லூர், 145 – முசிறி, 146 – துறையூர் (தனி) ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மையங்களில் ஒழுங்காக ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடைபெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் தினமும் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு நிலையை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய பாதுகாப்புப் படையினர், இரண்டாம் அடுக்கில் தமிழக சிறப்பு காவல் படையினர், மூன்றாம் அடுக்கில் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனுடன், அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே நுழையாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.மேலும், திருச்சி மாவட்ட நிர்வாகமும் மாநகர காவல்துறையும் இணைந்து முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
இந்த தகவலை திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வே.சரவணன் வெளியிட்டுள்ளார்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு



Comments