Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி அரசு மருத்துவமனையில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உலக மலேரியா தினம் இன்று (ஏப்ரல் 25, 2026) விழிப்புணர்வுடன் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி குழந்தைகள் நலத்துறை, சமூக நல மருத்துவத்துறை மற்றும் பொது மருத்துவத்துறை இணைந்து மருத்துவமனை வளாகத்தில் மலேரியா விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

பின்னர் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் மரு. குமரவேல் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை மருத்துவ கண்காணிப்பாளர் மரு. அருண் ராஜ், பொது மருத்துவ பேராசிரியர் மரு. சதீஷ் குமார் மற்றும் சமூக மருத்துவத்துறை தலைவர் மரு. பர்வீன் ஆகியோர் கலந்து கொண்டு மலேரியா பரவுவதற்கான காரணங்கள், அதன் தாக்கங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.மேலும், இவ்வாண்டின் முழக்கமான “மலேரியாவை ஒழிப்போம் – இப்பொழுது நம்மால் முடியும், அதை உடனே செய்திட வேண்டும்” என்ற வாசகம் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நல மருத்துவ பேராசிரியர் மரு. செந்தில் குமார், மரு. ராமசுப்பிரமணியம், உதவி பேராசிரியர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவியர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் நிறைவில் இணைப் பேராசிரியர் மரு. சிவகுருநாதன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சி மலேரியாவை விரைவில் முழுமையாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *