திருச்சி பெரியசெட்டி தெரு பகுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த உதய் என்பவர் பாலாஜி டெஸ்டிங் என்ற பெயரில் தங்க நகைகளை பரிசோதித்து, உருக்கி அதனை மீண்டும் ஆபரணங்களாக செய்து விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார்

பெரிய செட்டிதெரு பகுதியில் இரண்டாவது மாடியில் குடும்பத்தினருடன் தங்கிஉள்ள இவரது மனைவி மகாராஷ்டிரா சென்றிருந்தநிலையில், திடீரென்று வீட்டில் புகுந்த இளைஞர் நகைகடை உரிமையாளரை கீழேதள்ளி வாயில் பிளாஸ்டர் ஒட்டி அவரை கழிவறைக்குள் வைத்து பூட்டிவிட்டு பின்னர் பீரோவில் வைத்திருந்த ஒரு கிலோ மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான்
நகைக்கடை வியாபாரியிடம் பணிசெய்யும் சிறுவன் உள்ளே வந்து பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்ததும், தனது முதலாளி கழிவறையில் கிடந்ததையும் பார்த்து முதலாளியை காப்பாற்றி பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மலைக்கோட்டை சரக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments