Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி: சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை – வாலிபருக்கு 20 ஆண்டு சிறை!

கடந்த 25.01.2023-ந்தேதி இரவு உறையூர் ராமலிங்கா நகர் அருகில் கடைக்கு சென்ற சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை (ஒரினச் சேர்க்கை) செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் விசாரணை செய்ததில் புத்தூர், களத்துமேட்டுத் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் வயது 24/26, த.பெ.முத்துபாண்டி என்பவரை கைது செய்து, எதிரி மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, கடந்த 01.04.2023-ந்தேதி மேற்படி எதிரி வெங்கடேஷ் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இன்று 27.04.2026-ந்தேதி மேற்படி வழக்கில் திருச்சிராப்பள்ளி மாண்பமை அமர்வு நீதிபதி, மகிளா நீதிமன்றம் அவர்களால் எதிரி வெங்கடேஷ் என்பவருக்கு 5 (m) r/w 6 (1) of POCSO Act 2012 -ன்படி 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.15,000/-அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்தியும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு தண்டனை பெற்றுத்தந்த ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *