திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் 53/22, த.பெ.வைத்தியலிங்கம், மஞ்சம்பட்டி, மருங்காபுரி என்பவர் கடந்த 20.09.2022 அன்று மேலூர், செவல்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நுழைந்து பள்ளி மாணவர்களிடம் தன்னை சமூக சேவகராக அறிமுகம் செய்து கொண்டு, பள்ளியில் உள்ள உணவுக்கூடம் மற்றும் கழிவறைகளை பார்வையிட்டதாகவும், பின்பு அப்பள்ளியில் படிக்கும் 17 வயது நிரம்பிய சிறுமியிடம் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக

பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண். 23/22 U/s 341 IPC & 7, 8, 11(iv) r/w 12 of POCSO Act 21.09.2022 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, அன்றைய தினமே எதிரி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (05.06.2026) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி. சண்முகபிரியா, அவர்கள் எதிரி வெற்றிவேல் 53/22, த.பெ வைத்தியலிங்கம், மஞ்சம்பட்டி, காரப்பட்டி, மருங்காபுரி தாலுக்கா,திருச்சி மாவட்டம் என்பவருக்கு 03 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூபாய். 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த மணப்பாறை மகளிர் காவல் நிலைய நீதிமன்ற பெண் தலைமை காவலர் திருமதி. கீதா என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments