திருச்சிராப்பள்ளி மாவட்டம், கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலரசூர் பகுதியை சேர்ந்த சுபாஷ் (22), த.பெ.வடிவேல் என்பவர் கடந்த 31.03.2026 அன்று இரவு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்ததாகவும். அப்போது அட்டு @ மாவேந்தன், அழுந்தலைப்பூர், இலால்குடி என்பவர் அந்த வழியாக வேகமாக வந்ததாகவும், இதை பார்த்த சுபாஷ் ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறாய் என மால்வாயில் உள்ள அட்டு @ மாவேந்தன் கேட்க சென்றதாகவும், அப்போது அங்கு அவர் இல்லாததால் மேற்படி சுபாஷ் அவரது வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில். மேற்படி சம்பவம் தொடர்பாக அட்டு @ மாவேந்தன் மற்றும் அவரது நண்பர்களான சரபோஜி (25) (வில்லிவாக்க காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி- HS No. 09/24), த.பெ.அம்பிகபதி, பொன்னங்கிணறு தெரு, வில்லிவாக்கம், சென்னை (தற்போது மால்வாயில் வசித்து வருகிறார்) மற்றும் சிலர் சேர்ந்து கொண்டு கடந்த 01.04.2026-ம் தேதி மேற்படி சுபாஷிடம் நான் வண்டில வேகமா போனா உனக்கு என்ன என்று கூறி அவரை தகாத வார்த்தையால் திட்டி சரபோஜி வைத்திருந்த பட்டா கத்தியால் சுபாஷின் தலை மற்றும் இடது பக்க விலாவில் குத்தியதில் காயம் ஏற்பட்டு சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சுபாஷின் தாய் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி கா.நி. குற்ற எண். 53/26, ச/பி.296(b), 109(1) BNS-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மேற்படி சிறையில் இருந்து வரும் எதிரியான சரபோஜி (25) (வில்லிவாக்க காவல் நிலைய சரித்திர பதிவேடு – HS No. 09/24), த.பெ.அம்பிகபதி, பொன்னங்கிணறு தெரு, வில்லிவாக்கம், சென்னை என்பவர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 06.05.2026-ம் தேதி சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 44 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments