த வெ க கட்சித் தலைவர் விஜய் தமிழக முதல்வர் ஆவதை வரவேற்றும் திருவெறும்பூர் தொகுதி எம் எல் ஏ நவல்பட்டு விஜி அமைச்சராக வேண்டியும் கட்சி நிர்வாகிகள் திரு நெடுங்களநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்ற த வெ க கட்சி காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள், ஐ யு எம் எல் உள்ளிட்டகட்சி ஆதரவுடன் இன்று காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வராக த வெ க தலைவர் விஐய்பொறுப்பு ஏற்று கொள்கிறார்

இந்த நிலையில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட த வெ க கட்சி நிர்வாகிகள் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றதை கொண்டாடும் வகையிலும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் ( எ) நவல்பட்டு எஸ். விஜி அமைச்சராக வலியுறுத்தியும் திருவெறும்பூர் அருகே உள்ள திரு நெடுங்கள நாதர் கோவிலில் உள்ள விநாயகர் திரு நெடுங்களநாதர், மங்களாம்பிகை, வாராகி அம்மன், சுப்ரமணிய வள்ளி தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஜய் படத்துடன் வந்து சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு செய்தனர்.

இந்த விழாவில் த வெ க கட்சியை சேர்ந்த நிர்வாகி ஜான் டேவிட், பூவேஷ் கண்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments