Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கான ஆஜர் அணிவகுப்பு நடத்தி அறிவுரை வழங்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை இன்று (10.05.2026) சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உட்கோட்ட காவல் அலுவலர்கள் மூலம் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் (ரவுடி பரேடு) ஆஜர்படுத்தி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப, அவர்கள் அறிவுறுத்தியிருந்தார்.

2) அதனடிப்படையில் இன்று (10.05.2026) 364 சரித்திரபதிவேடு குற்றவாளிகள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆஜர் அணிவகுப்பில் கலந்து கொண்டார்கள். இந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் ஆஜர் அணிவகுப்பை இன்று காலை சுமார் 1200 மணியளவில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒவ்வொரு உட்கோட்டம் வாரியாக தணிக்கை செய்து. அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) மற்றும் 03 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர்.

3) அதன்பிறகு, வந்திருந்த 364 சரித்திரபதிவேடு குற்றவாளிகளையும் மைதானத்தில் உட்கோட்டம் வாரியாக நிறுத்தி அவர்களுக்கு ரவுடி பரேடு நடத்தப்பட்ட விபரம் குறித்தும், அவரவர் குடும்ப சூழ்நிலை மற்றும் குழந்தைகளை கருத்தில் கொண்டு, எவ்வாறு அவரவர் நடத்தைகளை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு மாற்றி கொள்ளாத பட்சத்தில் காவல் துறையின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதை பற்றியும் மிக தெளிவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்துரைத்தார்.

 

4) அதன்பின்னர், ஒவ்வொரு சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பதிவேடுகளையும் அந்த காவல் ஆய்வாளர்கள் மூலம் சரிபார்கப்பட்டு, குறைகள் நிவர்தி செய்யப்பட்டது.

5) இதன்மூலம் வந்திருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தாங்கள் இனிவரும் காலங்களில் எந்தவிதமான குற்ற சம்பவங்களிலும் ஈடுபடாமல் தத்தம் குடும்பத்தையும், குழந்தைகளையும் நல்ல முறையில் பாராமரிப்பேன் என்ற நிலைப்பாட்டுடன் சென்றனர். இனி வரும் காலங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யாரேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

6) இதுபோன்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் ஆஜர் அணிவகுப்பு (HS Parade) இதுநாள்வரை திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் நடைபெறாத ஒன்றாகும். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப, அவர்கள் தனது மிகுந்த பணிச்சுமையிலும், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி குற்றவாளிகளின் வாழ்வில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தி, அவர்களது வாழ்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *