ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டும் சிறப்பு நிகழ்ச்சியில் ஆசிரியைகள் ஜெயந்தி மற்றும் ஆனந்தவல்லி, வட்டாரக் கல்வி அலுவலர் க. மருதநாயகம், உள்ளூர் தன்னார்வலர் மணிகண்டன் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் எஸ். சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

மாணவர்கள் உயர்கல்விக்கான விண்ணப்பங்களை எவ்வாறு பதிவு செய்வது, எந்த கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம், விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன போன்ற விவரங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன. மேலும், விண்ணப்பப் பதிவு செய்வதற்கான இணையதள முகவரிகளும் வழங்கப்பட்டன.
மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஓவியப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவிக்காக கோடை விடுமுறையில் இலவச ஓவியப் பயிற்சி வழங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக இருப்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உயர்கல்வியில் எவ்வாறு சேர்ப்பது என்பது குறித்து போதுமான தகவல்களை அறிந்திருக்கவில்லை. குறிப்பாக பெற்றோர்களின் கல்வித் தகுதி குறைவாக இருப்பதால், குழந்தைகளை எந்த கல்லூரியில் சேர்ப்பது, எந்தப் படிப்பைத் தேர்வு செய்வது போன்ற விஷயங்களில் தயக்கமும் குழப்பமும் காணப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, அருகில் உள்ள அரசு கலைக் கல்லூரி, லால்குடி வண்ணான்குளம் மற்றும் பிற கல்லூரிகளை பெற்றோர்களும் மாணவர்களும் நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முயற்சியின் மூலம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் எதிர்காலத் திட்டமிடும் திறன் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments