Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற இருவர் கைது

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெரு பகுதியில் இளைஞர்களின் உடல் நலன் பாதிக்கும் போதை மாத்திரைகள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பாலக்கரை சப் இன்ஸ்பெக்டர் பாத்திமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்க வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்தனர் பின்னர் அவர்களது பையை வாங்கி சோதனை இட்டபோது அதில் ரூபாய் 8000 மதிப்பிலான 100 போதை மாத்திரைகள், ஊசிகள் இருப்பது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து பாலக்கரை காஜா பேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிக் (வயது 24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து போதை மாத்திரைகளை கைப்பற்றினர் கைதான முகமது ஆசிக் கை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி ஜெயிலில் அடைத்தனர் சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.

கள்ளச் சந்தையில் மதுபானம் விற்றவர் கைது திருச்சியில் உள்ள ஒரு தேவாலயம் அருகே ஒருவர் மதுபானம் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனே சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடம் வரைந்து சென்று அங்கு மதுபானம் விற்றுக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை குளத்தூர் ஆயக்குடி வயல் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (வயது 59). என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 66 குவாட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு ரூ.8000 ஆகும்.

கோட்டை பகுதியில்,குட்கா,புகையிலைவிற்ற ஒருவர் கைது.திருச்சி பட்டர் ஒர்த் ரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டார்.

 

பின்னர் அந்த கடையில் மறைத்து வைத்திருந்த இரண்டு கிலோ எடை கொண்ட ஹான்ஸ் புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர் இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர் கண்ணன் (வயது 48) என்பவரை கைது செய்தனர். இதேபோன்று கோட்டைபோலீசாருக்கு கோட்டைசௌந்தரபாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் ஒரு வீட்டில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

உடனே இன்ஸ்பெக்டர் சுரேந்தர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சவுந்தரராஜன் என்பவரது வீட்டில் சோதனையிட்டனர் அப்போது அங்கு 12 கிலோ எடையுள்ள ஹான்ஸ், எட்டு கிலோ எடை கொண்ட கூலிப்,ஏழரை கிலோ எடை கொண்ட விமல் பான் மசாலா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது பின்னர் போலீசார் அதனை கைப்பற்றி விசாரணை நடத்தினர் விசாரணையில் அந்த புகையிலைப் பொருட்களை கடத்தி வைத்திருந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (வயது 35) என்பது தெரிய வந்தது அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *