திருச்சி ஜங்ஷனில் வில் வடிவ பிரம்மாண்ட இரும்பு ரயில்வே மேம்பாலம். திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை போக்க திருச்சி ஜங்ஷன் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் 12 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைதுறை தொடங்கியது. சுமார் 300 மீட்டர் நீளத்தில் 12 மீட்டர் அகலத்தில் இணைப்பு சாலையுடன் பாலம் கட்டும் பணி கடந்த 01.02.2024ம் ஆண்டநெடுஞ்சாலைத்துறை
மேற்கொண்டது.

இந்த பால பணிகள் 30.04.2025ஆம் ஆண்டு முடிவடைந்து இருக்க வேண்டும். ஆனால் பணிகள் தொடர்ந்து காலதாமதமாகி வருகிறது. மிக முக்கியமாக இந்த பாலத்தில் குறிப்பிடும் படியான அம்சங்களை ரயில்வே துறை கட்டும் பால பகுதியில் செய்துள்ளது. வில் வடிவ பாலம் குறிப்பிடத்தக்க அம்சங்களை பெற்றுள்ளது.

594 டன் எடையுள்ள இரும்பு கேடர்களை வைத்து bounce bridgeவாகனங்கள் செல்லும் பாலங்கள்) (காற்று, கனரக வாகனங்களின் போக்குவரத்து அல்லது வெப்பத்தின் காரணமாக லேசாக ஆடக்கூடியவை) பாலத்தை வடிவமைத்து உள்ளது.

ரூ 20கோடியில் ரயில்வே கட்டுமான துறை முக்கியமாக இந்த பாலத்தை 58 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் அகல நடைபாதையும் இந்த இரும்பு பாலத்தை ஜூலை மாத இறுதிக்குள் கிரேன் மூலம் நகர்த்தி கான்கிரீட் பில்லரில் வைத்துவிட்டு அதில் கான்கிரீட் அமைத்து பால பணிகள் முடிவடையும் என ரயில்வே

கட்டுமானத்துறை தெரிவித்துள்ளது. விரைவில் மீதமுள்ள 150 மீட்டர் நீளமுள்ள இணைப்பு பாலப் பணிகளை நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு ஆறு மாத காலத்தில் பணிகளை முடிக்கும் என தெரிவித்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments