கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் – திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு திருச்சி சேதுராப்பட்டி பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு ஐடிஐ என மூன்று கல்லூரிகள் செயல்பட்டுவருகிறது, இதுமட்டுமன்றி பள்ளியும் செயல்பட்டுவருகிறது.

இதனால் மாணவர்கள் பெருமளவு வந்து செல்லும் இந்த சேதராப்பட்டி பகுதியில் இருந்து விராலிமலை மற்றும் துவரங்குறிச்சி பகுதிக்கு போதிய பேருந்து இல்லாததால், கல்லூரி மாணவர்கள் இரவு வரை காத்திருந்து பேருந்தில் ஏறி வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் எனவே பேருந்து வசதியை அதிகரிக்க வலியுறுத்தி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேதுராப்பட்டி சாலையில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களின் சாலை மறியல் போராட்டத்தினால் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ஒரு மணி நேரம் போராட்டம் மணிகண்டம் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments