இன்று தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், இன்று காலை முதல் மழைமேகங்கள் தென்பட்டநிலையில் பிற்பகல் முதல் திருச்சியில் பல்வேறு இடங்களில் கனமழையும் மிதமான மழையும் கொட்டித்தீர்த்தது. மாநகர பகுதிகளான சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், கண்டோன்மென்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழையும் அதனைத் தொடர்ந்து மிதமான மலையும் பெய்தது, இந்த மழையின் காரணமாக திருச்சி மாநகர மக்கள் சற்று நிம்மதியடைந்தனர், அதேநேரம் திடீர் மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments