திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்கம், தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்துடன் இணைந்து இன்றையதினம் திருச்சி மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டிகளை புத்தூர் பிஷப்ஹீபர் பள்ளி அரங்கில் நடத்திவருகிறது.

சப்ஜுனியர், ஜுனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கான வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்றுவருகிறது.திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் வலுதூக்கும் பயிற்சி மையங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே பென்ச்பிரஸ், கிளாசிக் டெட்லிப்ட், ஸ்குவாட் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பதக்கங்கள், சான்றிதழ்களும் பள்ளி மாணாக்கர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டுவருகிறது.

53, 59, 66, 74, 83, 93, 105, 120 மற்றும் அதற்கு மேற்பட்ட எடைப்பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என நடைபெறும் போட்டிகளில் வீரர், வீராங்கணைகள் அதிகளவு எடையினை தூக்கி தங்களது திறமையினை வெளிப்படுத்திவருகின்றனர்.
வலுத்துக்கும் சங்கத்திற்கு அரசின் அங்கீகாரம் வேண்டும், புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் விஜய் அவர்கள் வலுத்துக்கும் போட்டியில் முதலமைச்சர் கோப்பை போட்டியில் இணைக்க வேண்டும், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோம் வீரர் வீராங்கனைகளுக்கு மாநில அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என செயலாளர் ஜூபேர் அகமது கேட்டுக்கொண்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments