திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 Phase – 1 m
திருச்சிராப்பள்ளி
பணியின் முதற்கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு HLO பணி மேற்கொள்ளும் பொருட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று (19.05.2026) முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் இ.ஆ.ப., அரசு அலுவலர்களுக்கான 3 நாள்

பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து இந்த 3 நாள் பயிற்சி வகுப்பினை சிறந்த வகையில் பயிற்சி பெற்று இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உரையாற்றினார்.
இப்பயிற்சி வகுப்பு சென்னை, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம், உதவி இயக்குநர் சுனிதா அவர்களால் நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பானது நாளை (20.05.2026) மற்றும் நாளை மறுநாள் (21.05.2026) ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி , முசிறி சார் ஆட்சியர் செல்வி.சுஷ்ரி சுவாங்கி குந்தியா இ.ஆ.ப., , மாவட்ட வன அலுவலர் சீ.கிருத்திகா,இ.வ.ப., வருவாய் கோட்டாட்சியர்கள், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது), மாநகராட்சி

இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), உதவி இயக்குநர் (ஊராட்சி மற்றும் தணிக்கை), அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், அனைத்து நகராட்சி ஆணையர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments