Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு பள்ளி நூலகம் குழந்தைகளை தேடி திட்டம்

 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவராயனேரி பகுதியில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காகசெயல்படுத்தப்பட்டுள்ளபள்ளி நூலகம் குழந்தைகளை தேடி என்ற புதுமையான கல்வி முயற்சி தற்போது நல்ல மாற்றத்தை உருவாக்கி வருகிறது.

 

இந்தத் திட்டம் கோடை விடுமுறை காலங்களில் ஏற்படும் கற்றல் இழப்பை குறைப்பதையும், வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதையும், குழந்தைகளின் கைபேசி பயன்பாட்டை குறைப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.விடுமுறை நாட்களில் பல குழந்தைகள் பள்ளி சார்ந்த கற்றல் செயல்பாடுகளிலிருந்து விலகி விடுகின்றனர். இச்சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெற்றோர்கள் தினக்கூலி தொழிலாளர்கள். குறிப்பாக பாசிமணி விற்பனை போன்ற பாரம்பரிய தொழில்களுக்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. குழந்தைகளை அமைதியாக வைத்திருக்க பெற்றோர்கள் அடிக்கடி கைபேசியை வழங்குகின்றனர். உணவு உண்ணும் நேரங்களிலும் வீடியோ பார்க்கச் சொல்லி உணவு கொடுப்பது வழக்கமாகி வருகிறது. இதனால் குழந்தைகள் அதிக நேரம் கைபேசியில் செலவழித்து அதற்கு அடிமையாகும் நிலை உருவாகியுள்ளது.

அதிகமான கைபேசி பயன்பாடு மற்றும் வாசிப்பு பழக்கமின்மையால் குழந்தைகள் பள்ளியில் கற்றதை மெதுவாக மறந்து வருவதை ஆசிரியர்கள் கவனித்தனர். இதற்கான தீர்வாக பள்ளி நூலக புத்தகங்களை நேரடியாக குழந்தைகளின் வீடுகளுக்கே கொண்டு செல்லும் புதிய முயற்சி தொடங்கப்பட்டது.இந்தக் கருத்தை கல்வியாளர் எஸ். சிவக்குமார், முன்னாள் முதல்வர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET), காஞ்சிபுரம் மாவட்டம் உருவாக்கினார்.

இத்திட்டத்தை இரா. தாரணி, ஆசிரியர், திருவள்ளுவர் குருகுலம் ஆரம்பப்பள்ளி செயல்படுத்தி வருகிறார்.இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு புதன்கிழமையும் தேவராயனேரி குழந்தை மாரியம்மன் கோவில் பகுதியில் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்கள் குழந்தைகளுடன் நேரடியாக உரையாடி, தொடர்ந்து வாசிக்க ஊக்குவிக்கின்றனர். பெற்றோர்களும் குழந்தைகளின் கற்றலில் பங்கேற்கத் தூண்டப்படுகின்றனர்.பள்ளிக் கல்வித்துறை வழங்கிய “நுழை”, “நட”, “ஓடு”, “பற” போன்ற கதையை அடிப்படையிலான கற்றல் நூல்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் மகிழ்ச்சியான கற்றலை ஊக்குவிக்கும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளன.திருவெறும்பூர் வட்டாரக் கல்வி அலுவலர் கே. மருதநாயகம் இந்த முயற்சியை பாராட்டி, “இத்தகைய திட்டங்கள் விடுமுறை காலங்களிலும் குழந்தைகளின் தொடர்ச்சியான கற்றலை உறுதி செய்வதுடன், பள்ளி – பெற்றோர் – சமூக உறவையும் வலுப்படுத்துகின்றன” என்று தெரிவித்தார்.கல்வியாளர் எஸ். சிவக்குமார் கூறுகையில்விடுமுறை காலங்களில் குழந்தைகள் நூலகத்தை அடைய முடியாவிட்டால், நூலகமே குழந்தைகளை தேடிசெல்லவேண்டும்.என்றுவலியுறுத்தினார்

கூடுதல் நிதி இல்லாமல், பள்ளியில் உள்ள நூலக வளங்களை பயன்படுத்தி சமூக அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் தற்போது குழந்தைகளின் வீடுகளுக்கு புத்தகங்கள், வாசிப்பு பழக்கம் மற்றும் புதிய நம்பிக்கையை கொண்டு செல்லும் ஒரு சிறந்த கல்வி இயக்கமாக உருவெடுத்து வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *