Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

நேர்மையான கண்டக்டர் – பயணி நெகிழ்ச்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழ். இவர் நடுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருச்சி சென்று இறங்கிச் சென்றுள்ளார்.

அதன்பின்னர் தனது மணிபர்ஸை பேருந்திலேயே தவறவிட்டு வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் அவர் தனது அலுவலக வேலையின் காரணமாக சென்னை சென்ற நிலையில் அவரது அலைபேசிக்கு சம்பந்தப்பட்ட அரசு பேருந்து நடத்துனர் சிவகுமார் தொடர்பு கொண்டு உங்களுடைய மணி பர்ஸ் மற்றும் ஆவணங்கள் எங்களது பேருந்தில் விட்டு விட்டு சென்று விட்டீர்கள் அதைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த தமிழ். சொந்த ஊரான நடுப்பட்டிக்கு வந்த நிலையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அந்த பேருந்து வரும்வரை காத்திருந்து பேருந்து வந்தவுடன் அதில் ஏறி பயணிகளிடம் நடத்துனரின் நேர்மையை எடுத்துக்கூறி அவரை பாராட்டி பயணிகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கியதுடன் நடத்துனருக்கு சால்வை அணிவித்து மகிழ்வித்தனர்.

 

பின்னர் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது நடத்துனர் மணிபர்சை அதன் உரகமையாளரான தமிழிடம் ஒப்படைத்தார். தனது முக்கிய ஆவணங்களும் கிடைத்ததால்i நடத்துனரை பாராட்டி அனுப்பிவைத்தனர். இந்த காட்சிகள்I சமூக வலைதளங்களில் பரவி நடத்துனர் சிவக்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *