Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி GH பயிற்சி மருத்துவர்கள் அத்துமீறல் வீடியோ வைரல்

திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில், பயிற்சி மருத்துவர்கள் நோயாளிகள் முன்னிலையிலே அருவருக்கத்தக்க வகையில் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவத்தின் வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது

திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனைக்கு திருச்சி மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.ஒரு நாளைக்கு சுமார் 5000 முதல் 7000 பேர் Unfortunatel வந்து செல்கின்றனர்.இதில் 500 பேர்உள்நோயாளியாக

அனுமதிக்கப்படுகினறர்.மருத்துவர்கள், செவிலியர், மாத்திரைகள், மருந்தாளர்கள் பற்றாக்குறஉள்ளஇந்தமருத்துவமனையில், பகல் நேரம் மற்றும் நேரங்களில் இரண்டு ஷிப்ட் ஆக மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் இரவு நேரங்களில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் நோயாளிகளின் வார்டில் மற்றும் மருத்துவமனை வராண்டாவில் அமர்ந்து கொண்டு கட்டிப்பிடிப்பதும், ஒருவருக்கொருவர் முத்தமிடுவதும், சொல்ல முடியாத அருவருக்கத்தக்க வகையிலான ஆபாச செயலில் ஈடுபட்டுவருவது நோயாளிகளை முகம்சுளிக்கவைக்கும் வகையில் உள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், கேமரா வேலை செய்யாத இடங்களில் அமர்ந்த இது போன்ற அத்துமீறலில் அவர்கள் ஈடுபடுவதும் தெரியவருகிறது, அதேநேரம் நோயாளிகளுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மருத்துவர்கள் அணுகினால் எரிச்சலூட்டும் வகையில் பேசி அங்கிருந்து விரட்டியடிப்பதுமாக செயலில் ஈடுபட்டுவருகின்றனர்பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனையிலேயே அத்துமீறலில் ஈடுபட்டதை நோயாளிகளே தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை வலைதளங்களிலும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்யும் தொழில் தெய்வம் என்பார்கள், அவ்வாறு தொழில் செய்யும் இடத்தை கோவில் என்பார்கள்… மருத்துவமனை முதல்வர் குமரவேல் மற்றும் அதிகாரிகள் இது குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு, இது போன்ற ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களது மருத்துவ அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *