Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

போக்சோ வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தெற்கு மகிழம்பாடிபகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
மேற்படி சிறுமியின் வீட்டிற்கு அருகில் கடந்த ஜனவரி 2023 -ம் ஆண்டு கட்டிடம் கட்டும் வேலைக்காக வந்திருந்த பாலு @ பாலசுப்ரமணியன் 39/23,

த.பெ.மருதமுத்து, மாரியம்மன் கோவில் தெரு, வீ.துறையூர், சமயபுரம், லால்குடி தாலுக்கா, திருச்சி என்பவர் மேற்படி சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியும், சிறுமியின் பெற்றோர்கள் இல்லாத சமயத்தில் அச்சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தல் செய்தும், கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண். 09/23, U/s 5(1), 5(j)(ii) r/w 6(1) of POCSO Act & 449 IPC ன் படி 23.02.2023 அன்று குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (25.05.2026) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி. சண்முகபிரியா, அவர்கள் எதிரி – பாலு @ பாலசுப்ரமணியன் 39/23, த.பெமருதமுத்து என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 15,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய நீதிமன்ற பெண் தலைமைக்காவலர் திருமதி.சோபியா என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *