முசிறி அருகே அரசு மதுபான கடை சூப்பர்வைசருக்கு மண்டை உடைப்பு, மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டாமல் பேனாவில் டிக் செய்ததால் மது பாட்டில் வாங்கியவர் ஆத்திரத்தால் அடித்ததாக கூறப்படுகிறது, அழகேசன் கைது செய்து விசாரணனை.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கொளக்குடி அரசு மதுபான கடையில் சீனிவாசநல்லூர் மேற்குத் தெரு ஏரி குளத்தை சேர்ந்த அழகேசன் மது பாட்டில்கள் வாங்கிய பொழுது பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டாமல் பேனாவில் டிக் செய்து கொடுத்ததால் கடை சூப்பர்வைசர் கனகராஜிடம் கேட்டபொழுது அவர் ஸ்டிக்கர் இல்லாததால் மதுபான பாட்டிலில் டிக் செய்து தருவதாக கூறியுள்ளார், இந்நிலையில் மீண்டும் பாட்டிலை கொடுத்து பத்து ரூபாய் பெற்றுக் கொள்ளுங்கள் என கூறியதை தொடர்ந்து அழகேசன் அரசு பத்து ரூபாய் வாங்கக்கூடாது என அரசு கூறியும் பத்து ரூபாய் வாங்குகிரீர்கள் எனக் கூறியுள்ளார். அதற்கு நான் கூடுதலாக வாங்கவில்லை என கூறி கடையை விட்டு வெளியே வந்தவரை அழகேசன் கையில் வைத்திருந்த மது பாட்டிலால் டாஸ்மாக் சூப்பர்வைசர் தொட்டியம் அருகே கொளக்குடி பட்டியைச் சேர்ந்த கனகராஜன் தலையில் பின்னால் பாட்டிலால் அடித்துள்ளார் இதில் தலையில் ரத்த காயம் ஏற்பட்டது, உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர், தொடர்ந்து தொட்டியம் போலீசார் தகவலை அறிந்து கனகராஜிடம் விசாரணை மேற்கொண்டு அவர் கொடுத்த புகாரின் பேரில் அழகேசனை தொட்டியம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு மதுபான பாட்டிலில் உள்ள விலைகளை தவிர கூடுதலாக பணம் பெறக்கூடாது என தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில் ஸ்டிக்கர் ஒட்டாமல் கூடுதலாக பத்து ரூபாய் எடுத்ததால் ஏற்பட்ட விபரீதம் என்பது குறிப்பிடத்தக்கது, மது பாட்டில்கள் ஸ்டிக்கர் ஒட்டாமல் பத்து ரூபாய் பெறக்கூடாது என அறிவிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments