கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழா: திருச்சியில் மாலை அணிவித்து மரியாதை; வட்டக் கழகச் செயலாளர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.

திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிஅவர்களின்வழிகாட்டுதலின் பேரில், திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்குத் தொகுதிக்குட்பட்ட டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் சல்மா கலந்து கொண்டு, கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர வட்டக் கழகச் செயலாளர்களுக்குப் பொற்கிழிகளை வழங்கி அவர் கௌரவித்தார்.

இந்நிகழ்வில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வன்னை அரங்கநாதன், கே.என்.சேகரன், மாநில அணி நிர்வாகி செந்தில், பகுதிக்கழகச்செயலாளர்மணிவேல். மற்றும் பகுதிக்கழகச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வட்டக் கழகச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments