Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பஞ்சப்பூரில் கான்கிரீட் தூண் இரும்பு திருட்டு – ஒருவர் கைது

திருச்சி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எதிரே திண்டுக்கல் செல்லும் சாலையை இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு அமைக்கப்பட்ட கான்கிரீட் தூண்கள் நீண்ட காலமாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.

இந்த நிலையில், அந்த கான்கிரீட் தூண்களில் உள்ள இரும்புக் கம்பிகளை சிலர் திருடி வருவதாக கூறப்படுகிறது. நேற்று இரவு, ஒருவர் ஆக்சா பிளேடு பயன்படுத்தி இரும்புக் கம்பிகளை அறுத்து திருட முயன்றுள்ளார். அப்போது அறுக்கப்பட்ட கம்பி அருகிலிருந்த மின்கம்பியில் விழுந்ததால் பலத்த சத்தத்துடன் தீப்பொறிகள் பறந்தன. மேலும், அந்த கம்பி சாலை ஓரத்தில் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.இதைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட அந்த நபர் தப்பி ஓட முயன்றதாகவும், ஆனால் அவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எ. புதூர் போலீசார் அந்த நபரை விசாரணை நடத்தினர். விசாரணையில், மது மற்றும் சிகெரெட் செலவுக்காக இரும்புக் கம்பிகளை அறுத்து விற்பனை செய்து வந்ததாகவும், நீண்ட நாட்களாக இந்த பகுதியில் இதேபோன்ற திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.மேலும், இந்த செயல்களுக்கு அப்பகுதியில் பணியாற்றிய வாட்ச்மேன் ஒருவர் உடந்தையாக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவதால் பெட்ரோல் பங்க மற்றும் காவல் நிலைய op ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் தடை ஏற்பட்டது குறிப்பிட தக்கது.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *