கஞ்சா கும்பலுக்கு துணை போகும் பாலக்கரை காவல்துறை, போராட்டக்காரர்களை அச்சுறுத்துவதை கண்டித்து மனு.

கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனைக்கு ஆதரவாக செயல்பட்டு, போராட்டக்காரர்களை ஒருமையில் பேசி, அநாகரீகமாக பேசி, அச்சுறுத்திய பாலக்கரை உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் சீருடை இல்லாத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பார்வதி, செயலாளர் ஏ. அஞ்சுகம் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதில் பொருளாளர் எம்.சுமதி, துணைச் செயலாளர் க. ஆயிஷா, காஜா பேட்டை பகுதி நிர்வாகி ஜெய்லானி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில தலைவர் க. இப்ராஹிம், நிர்வாகக் குழு உறுப்பினர் சொக்கி சண்முகம், பொன்மலை பகுதி செயலாளர் ராஜா, இளைஞர் பருமன்ற நிர்வாகி என்.எஸ்.பாட்ஷா, த. விஷ்வா, ஈஸ்வரி மாணவர் பெருமன்ற நிர்வாகி செ.விஷ்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments