Site Logo mobile
Search Icon
Mobile Gif
Uncategorized

ரூ.500 கோடி நெல் நிலுவை கோரி திருச்சியில் போராட்டம்

திருச்சியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்; நெல் கொள்முதல் நிலுவைத் தொகை ரூ.500 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க கோரிக்கை.

மத்திய அரசின் தேசிய கன்ஸ்யூமர் கூட்டுறவு சங்கம் (NCCF) மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான சுமார் ரூ.500 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தொடர்ந்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில்:–

தமிழக அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுவது போல, மத்திய அரசின் தேசிய கன்ஸ்யூமர் கூட்டுறவு சங்கமும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகையில் ரூ.500 கோடி கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து கடந்த 11-ஆம் தேதி தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த போது, 15 நாட்களுக்குள் நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார். இதற்காக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லிக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும், இதுவரை நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. எனவே விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *