Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் இயக்கம்: திருச்சியில் ஆலோசனைக் கூட்டம்!

தமிழக பாஜக தலைவராக 2021 முதல் 2025 வரை பதவி வகித்த அண்ணாமலை  அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த 5-ம் தேதியன்று ‘We the Leaders’ (வீ த லீடர்ஸ்) இயக்கத்தினை துவங்கினார். தற்போது இந்த இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் என அனைத்து துறைகளிலும் மக்களுக்கு நன்மை பயக்கும் மாற்றத்தினை உருவாக்கவும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவும் அண்ணாமலை தொடங்கிய இந்த இயக்கத்தில், அக்கட்சியில் இணைந்த பலரும் தன்னார்வலராக செயல்பட்டு உறுப்பினர் சேர்க்கையினை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், வீ த லீடர்ஸ் இயக்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட தன்னார்வலர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் உறையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வியக்கத்தின் தன்னார்வலர்களான பிரபாகரன், சுரேஷ், காசி மகேஸ்வரன், சிவக்குமார் ஆகியோரது ஏற்பாட்டின்பேரில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாஜகவினை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தங்களை அண்ணாமலையின் இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.

இதுகுறித்து தன்னார்வலர் காசி மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருச்சி மாவட்டத்தில் இம்மாதத்திற்குள் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தன்னார்வலர்கள் அந்தந்த பகுதிகளில் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். அரசியல் பயிற்சி பட்டறை நடத்தி தலைவர் அவர்கள் பொறுப்புகள் வழங்கி செயல்பட இருப்பதாக கூறிய நிலையில், தலைவர் கூறிய வழியில் செயல்படுத்துவோம்.

திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியலுக்கு அப்பாற்பட்ட பலரும் அண்ணாமலையை பிடித்து அரசியலுக்கு வந்துள்ளனர் என்பது பெரிய செய்தி. இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டு, மாயையில் இருந்து விடுபட்டு அண்ணாமலை என்ற அரசியல் சக்தி உருவாகி இருப்பதை எண்ணி அண்ணாமலையின் தலைமையேற்று வந்துள்ளனர். அண்ணாமலையை தவிர்த்து இனி தமிழக அரசியல் இருக்காது. தமிழக அரசியல் அண்ணாமலையை பார்த்து தான்

மாற்றம் ஏற்படும். கட்சி அறிவித்த பிறகு கொள்கை கோட்பாடுகள் குறித்து தலைவர் சொல்லுவார். தலைவர் கூறியபடி தற்போது உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல அண்ணாமலை குறித்த தற்குறிகள் விமர்சனத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இல்லை, யாரையும் குறைத்து மதிப்பிடவும் இல்லை, யாரையும் விமர்சனம் செய்யப் போவதுமில்லை என்றார்.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தன்னார்வலர்கள் பலர் மேடையில் பேசும்போது, அண்ணாமலை கார்த்திகை தீபம் எரிவது போல தமிழகத்திற்கு வெளிச்சமாக வந்திருக்கிறார். அவர் பின்னால் கூடியுள்ள அனைவரையும் நாம் வழிகாட்டப் போகிறோம். குக்கிராமங்களில் கூட அண்ணாமலையின் புகழ் பரவி உள்ளது. இயக்கத்தை கட்டமைப்பது தான் நமது வேலை, ஒவ்வொருவரும் இதனை தமது பணியாக எடுத்துக் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்றனர்.

தேசிய சிந்தனை உள்ள சமூக நீதி பேசும் தலைவர் அண்ணாமலை தான். சேரன் செங்குட்டுவன், அதற்கு முன்னால் கரிகால் சோழன் ஆகியோர் தெற்கிலிருந்து வடக்கு வரை ஆட்சி புரிந்து இருக்கிறார்கள். இனி அனைவரும் அண்ணாமலை அவரிடம் சென்று இங்கிருந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கு வழிகாட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *