Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பழுதியம் நிலங்கள் சரிபார்பு மனுக்கள் அனுப்பலாம் – மாவட்ட ஆட்சியர்

 

பூஜ்ஜியம் மதிப்பீடு நிலங்களின் தடைநீக்க பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம்

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரத்திக் தயாள்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வருவாய் ஆவணங்கள் கணினி மயமாக்கலின் போது தடை செய்யப்பட்ட நிலங்கள் மற்றும் பத்திர பதிவுத்துறையினரால் பூஜ்ஜியம் என்று மதிப்பீடு வழங்கப்பட்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்ய இயலாத சூழல் நிலவுகிறது.

எனவே இந்த பதிவுகளை சரி பார்ப்பதற்கு ஒரு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(பதிவுகள் சரிபார்ப்பு) அரசால் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இவர் திருச்சியை தலைமையிடமாக கொண்டு திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தடையினங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ் நிலம் இணைய தளத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் பத்திர பதிவுத்துறையால் ஸ்டார் 2.0 இணையத்தில் “பூஜ்ஜியம்” என்று மதிப்பீடு வழங்கப்பட்ட நிலங்களின் தடைகளை நீக்குவது தொடர்பாக பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கலாம். இவரது அலுவலகம் பழைய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள இராணி மங்கம்மாள் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

மேலும் மனுக்களை sdro.rv.try@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரத்திக் தயாள்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு:

உதவி இயக்குநர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,திருச்சிராப்பள்ளி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *