திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியத்தில் நிதி நிறுவன மேலாளர் தவறான பெண் உறவை தட்டிக் கேட்ட மனைவிக்கு நேர்ந்த கொடூரம் – நிர்வாண படுத்தி அடித்து உதைத்த கணவர் மீது வழக்குப்பதிவு – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே தவறான உறவை தட்டிக்கேட்ட மனைவியை, கணவர் நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (44). இளம் தொழிலதிபரான இவர், அப்பகுதியில் பெரிய ஷாப்பிங் மால் ஒன்றை நடத்தி வருகிறார்.இவருக்கும் நித்யா (39) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, மூன்று குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், பிரபு தனது ஷாப்பிங் மாலில் பணிபுரியும் பெண் ஒருவருடன் முறையற்ற உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.இதனை அறிந்த நித்யா, தனது கணவரை பலமுறை கண்டித்துள்ளார். இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.

இது குறித்து நித்யா மீண்டும் கேட்டபோது, ஆத்திரமடைந்த பிரபு நித்யாவை ஆபாசமாகத் திட்டி, அவரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது உயிருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.கணவரிடமிருந்து தப்பித்த நித்யா, ஒரு அறைக்குள் தன்னை பூட்டிக்கொண்டு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த பெண் காவல் துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட அவர், முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து நித்யா அளித்த புகாரின் பேரில், தொட்டியம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனக்கும் தனது குழந்தைகளுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் கணவரிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தமிழக முதல்வர் விஜய் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறிவரும் நிலையில் இந்த வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தனக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட நித்யா கண்ணீர் மல்க கதறி அழுதபடி கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments