தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 25 பேர் கிரிக்கெட் விளையாட தங்கள் பள்ளி வாகனத்தில் சென்றுள்ளார்கள். கிரிக்கெட் விளையாட்டு போட்டி முடிந்து மீண்டும் தனியார் பள்ளிக்கு வாகனத்தில் சென்றபோது பள்ளி வாகனத்தின் ஓட்டுநர் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் ஓட்டிச் சென்றதை பார்த்த பொதுமக்கள் மேற்படி வாகனத்தை நிறுத்தி தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் விரைந்து சென்று பள்ளி வாகனத்தின் ஓட்டுநரை சோதனை செய்த போது அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. 25 பள்ளி மாணவர்களின் உயிருக்கு மரணத்தை விளைவிக்கக் கூடிய வகையில் அவருடைய செயல் இருந்ததால் மரணம் விளைவிக்கக் கூடிய பிரிவில் வாகனத்தை ஓட்டிச் சென்ற தனியார் பள்ளியின் உரிமையாளர் மீதும், வாகன ஓட்டுநர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனியார் பள்ளி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் பள்ளி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் வேறு வாகனம் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தனியார் பள்ளியின் உரிமையாளர்கள் தங்கள் பள்ளி வாகனத்தை இயக்கும்போது தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளிப் பேருந்துகளின் ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள் 2012-ல் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற தவறினால் பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளி வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் ஒவ்வொருமுறை வாகனத்தை இயக்கும்போது அதன் ஓட்டுநர்கள் குடிபோதையில் உள்ளனரா? என பரிசோதனை செய்த பின்னரே வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டும்.

மேலும் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கவும், அதை கடைபிடிக்காமல் இருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கிவுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments