Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி: தாய் கோவிலில் மின் வேலி பாய்ந்து சிறுமி காயம் – பொதுமக்கள் மறியல்!

திருச்சி துறையூர் ஆத்தூர் சாலையில் அமைந்துள்ள தாய்க்கோவில் எனும் தனிநபருக்கு சொந்தமான பிரமாண்டமான கட்டிடத்தை சுற்றிலும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது துறையூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துறையூர் நகராட்சிக்கு சொந்தமான மின் மயானம் அமைந்துள்ளது. இதனருகே தாய்க்கோயில் இதனை பிரபல தொழில் அதிபர் சுரேஷ்குமார் என்பவர் தனது தாயின் நினைவாக அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் இந்த தாய் கோயில் எனும் கட்டிடத்தை கட்டி பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு துறையூர் நகர மன்ற திமுக உறுப்பினர் நித்யா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகள் அவரது தாய் உள்ளிட்டோர் அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது ஓய்வு எடுப்பதற்காக தாய் கோவிலின் ஓரத்தில் ஒதுங்கிய போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார்.

இதில் சுயநினைவு இழந்த 12 வயது பெண் குழந்தை துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தகவலறிந்த ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். மேலும் மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பொழுது உயர் அழுத்த மின்சாரம் வீட்டை சுற்றி இருப்பதை உறுதி செய்தனர்.

இதனை அடுத்து மின் இணைப்பை துண்டித்த பொழுதும் அதில் மின்சாரம் வந்துள்ளது.அப்பொழுதுதான் அந்த கட்டிடத்தில் மேலே சோலார் மின் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது.அதிலிருந்து மின்சாரம் பாய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வெளியே செல்வார்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த கட்டிடத்தில் அருகில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் காரியம் செய்வதற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்சாரம் பாயும் நேரத்தில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வருபவர்கள் நிலைமை என்னாவது என்ற அச்சமும் மரண பயமும் பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

இது பற்றி நகர்மன்ற உறுப்பினர் நித்யா கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் கட்டிடத்தில் மின்சாரம் தாக்கி 12 வயது குழந்தை பாதிப்படைந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *