Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருஈங்கோய்மலையில் 560 படிகளில் யோகா செய்த 4ம் வகுப்பு மாணவன் ராகவன்

முசிறி அருகே திருஈங்கோய்மலை அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு செல்லும் ஒவ்வொரு படிகளிலும் 4ம் வகுப்பு மாணவன் ராகவன் யோகாசனம் செய்து 560 படிகள் ஏறி யோகா விழிப்புணர்வு…மலையிலுள்ள 560 படிகளிலும் ஒவ்வொரு யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது..

திருச்சி மாவட்டம், முசிறி அருகே திருஈங்கோய்மலை அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோவில்மலையின் உச்சியில் அமைந்துள்ளது, மலையானது 560 படிகளை கொண்டு உள்ளது, கோவிலில் கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராஜேந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைமுருகன். விவசாய கூலி வேலை செய்துவரும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் தண்ணீர்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் ராகவன்

திருஈங்கோய்மலை அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோவில்மலையின் உச்சிக்கு செல்லவுள்ள 560 படிகளில் உலக மக்கள் நலன் பெறவும், உலக அமைதிக்காகவும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு படியிலும் சிரசாசனம், சக்ராசனம், பத்மாசனம், தனுராசனம், நடராஜர்ஆசனம், மயூராசனம், பத்மயூராசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை ஒவ்வொன்றாக செய்து மலையில் உச்சிக்கு சென்று கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து பிரார்த்தனையை நிறைவேற்றினார்,

இது குறித்து மாணவன் ராகவன் கூறுகையில் உலக அமைதி வேண்டியும், மழை பெய்து விவசாய செழிக்கவும் மற்றும் யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கோவில்களுக்கும் சென்று படிகளில் யோகாசனம் செய்து வழிபட்டு வருகிறேன். தொடர்ந்து பல்வேறு கோவில்களுக்கு செல்ல உள்ளேன், யோகா மூலம் உடல் புத்துணர்ச்சி கிடைக்கிறது, அன்றாடம் யோகா செய்வதால் உடல் வலிமை பெறும் என்று கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *