Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஊதிய உயர்வு கோரி மணப்பாறை டிஎன்பிஎல் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

மணப்பாறை அருகே டி.என்.பி.எல்., ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 500 பேர் பணியை புறக்கணித்து போராட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் அலகு இரண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு காகித அட்டை தயாரிக்கும் இந்த ஆலையில் சுமார் 2400 க்கும் மேற்பட்ட ஒப்பந்த படியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 

கடந்த ஏப்ரல் மாதம் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு 3 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். நிரந்த பணியாளர்களுக்கு வழங்குவது போல் தரமான உணவு வழங்க வேண்டும். வார விடுமுறை நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 6 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டிய ஒப்பந்த தொழிலாளர்கள் சுமால் 500க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *