ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு, திருச்சி ஞானசேகரன் வயது 71/2026, த/பெ.சீனிவாசன், நக்கசேலம், குன்னம் தாலுகா, பெரம்பலூர் மாவட்டம் என்பவர் தன்னிடம் உள்ள நான்கு பால் சேகரிப்பு வாகனங்களுக்கு அம்பயூர், லாடபுரம், செட்டிகுளம் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளுக்கு வழித்தட அனுமதி உத்தரவை வழங்குவதற்காக ரூ.25,000/- கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில், திரு.கப்ரையன், வயது 65/2026, த/பெ.சாமிக்கண்ணு, முன்னாள் பொது மேலாளர்,

திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் லிமிடெட், திருச்சி என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நக்கசேலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் திரு.ஞானசேகரன் என்பவர் தன் பெயரிலும், தன் மனைவி மற்றும் நண்பர்கள் பெயர்களில் உள்ள சரக்கு வாகனங்கள் வைத்து தொழில் செய்து வருகிறார். திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் என்ற ஆவின் நிறுவனத்திற்கு பால் சேகரிப்புப்பணிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வாகனங்கள

தேவைப்படுவதாக 10.01.2008ஆம் தேதி நாளிதழில் டெண்டர் கோரப்பட்டிருந்ததை பார்த்து, அயலூர், லாடபுரம், செட்டிகுளம் மற்றும் அரியலூர் ஆகிய வழித்தடங்களில் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். மேற்படி நான்கு வழித்தடங்களில் பால் சேகரிப்பு பணிக்கு அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில், அந்த உத்தரவை பெறுவதற்காக 18.02.2008ஆம் தேதி காலை சுமார் 11.30 மணியளவில் திருச்சி, கோட்டப்பட்டு, ஆவின் அலுவலக பொது மேலாளர் திரு.கப்ரையன் என்பவரை சந்தித்து நான்கு வழித்தடங்களில் பால் சேகரிப்பு வாகனங்களுக்கான உத்தரவை கேட்டபோது, மேற்படி உத்தரவை கொடுப்பதற்காக திருச்சி, ஆவின் பொது மேலாளர் திரு.கப்ரையன் ரூபாய் 25,000/-

லஞ்சம் கேட்டது தொடர்பாக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 18.02.2008 ஆம் தேதி குற்ற எண்.06/2008-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 19.02.2008ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் திரு.ஞானசேகரன் என்பவரிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.25,000/- த்தை கேட்டு பெற்ற போது திருச்சி, ஆவின் அலுவலக பொது மேலாளர் எதிரி திரு.கப்ரையன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இன்று 29.06.2026ஆம் தேதி விசாரணை முடிவுற்று திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.மல்லியரசு அவர்கள், திரு.கப்ரையன், வயது 65/2026, த/பெ.சாமிக்கண்ணு, முன்னாள் பொது மேலாளர், திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் லிமிடெட், திருச்சி என்பவர் லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.15,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், மேலும் அரசு பணியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.15,000/- அபராதமும்,அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேற்படி வழக்கினை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிகண்டன் திறம்பட காட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.கோகுலகண்ணன் அவர்கள் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு நீதியான தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments