கல்லூரி மாணவியை தாக்கிய திருநங்கை – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் ரஹீமா (20) இவர் விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி பாரா மெடிக்கல் (Critical care) மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் துறையூரில் இருந்து திருச்சிக்கு பேருந்தில் வந்து செல்வார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி அவர் கல்லூரியை முடித்துவிட்டு மதியம் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்வதற்கு தனியார் பேருந்தில் ஏறி உள்ளார்

அப்பொழுது அந்தப் பேருந்தில் ஏறிய ஒரு திருநங்கை ரஹீமாவிடம் யாசகம் கேட்டுள்ளார் அப்போது அவருக்கு யாசகம் தர ரஹீமா மறுத்துள்ளதாக கூறப்படுகிறது திருநங்கை சரமாரியாக தாக்கினார் அந்த தாக்குதல் காட்சிகள் பேருந்தில் இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது அந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகின இந்த சம்பவம் குறித்து ரஹீமா கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் அந்த திருநங்கை மீது ஆபாசமாக பேசுதல் தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த திருநங்கையை தேடி வருகின்றனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments